இந்தியா
பனிப்பொழிவு

உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு

Update: 2022-01-02 03:37 GMT
உத்தர பிரதேசத்தில் இந்த வாரம் முழுவதும் பனிப்பொழிவு நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
லக்னோ:

வடமாநிலங்களை கடும் குளிர் வாட்டி வரும் நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்தில் இன்று அதிகாலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

அந்த மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் கட்டிடங்கள், வாகனங்கள், மரங்கள் பனி மூடி காணப்பட்டன. சாலைகளிலும் பனிப்பொழிவு நீடித்தன.

இதேபோல், அம்மாநிலத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் அதிகாலையில் பனிப்பொழிவு நீடிக்கிறது என்றும், ஒரு வாரத்திற்கு இந்த பனிப்பொழிவு நீடிக்கும் என இந்தியா வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்... மீரட்டில் விளையாட்டு பல்கலைக்கழகம் - பிரதமர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்
Tags:    

Similar News