இந்தியா
துணை முதல் மந்திரி அஜித் பவார்

மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா

Published On 2022-01-01 05:43 GMT   |   Update On 2022-01-01 07:20 GMT
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையின் உச்சத்தில் மகாராஷ்டிரா அதிக பாதிப்புகளை சந்தித்தது.
மும்பை:

நாட்டில் கொரோனா பாதிப்புகள் பரவலானபோது, மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் இருந்தனர்.

இதற்கிடையே, நாடு முழுவதும் கொரோனா தொற்றுகள் குறைந்து வருகின்றன. எனினும், கொரோனா 3-வது அலை ஏற்படக்கூடிய சாத்தியம் பற்றி நிபுணர்கள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 மந்திரிகள் மற்றும் 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என துணை முதல் மந்திரி அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News