இந்தியா
பிரதமர் நரேந்திர மோடி

கோவாவில் பிரதமர் மோடி: பல்வேறு வளர்ச்சிப் பணி திட்டங்களை திறந்து வைக்கிறார்

Published On 2021-12-19 09:22 GMT   |   Update On 2021-12-19 09:22 GMT
விடுதலை தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக கோவா சென்றுள்ள பிரதமர் மோடியை அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் வரவேற்றார்.
கோவாவில் ஆண்டுதோறும் டிசம்பர் 19-ம் தேதி விடுதலை தினம் கொண்டாடப்படுகிறது. விடுதலை தினத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள்  வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே பிரதமர் மோடி கோவா விடுதலை தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று பிற்பகல் விமானம் மூலம் கோவா சென்றுள்ளார். பனாஜி விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடிக்கு அம்மாநில முதல்வர் பிரமோத் சாந்த் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

பனாஜியில் உள்ள ஆசாத் மைதானத்தில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

கோவா விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மறுவடிவமைக்கப்பட்ட அகுவாடா கோட்டை சிறை அருங்காட்சியகத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்.



பின்னர், கோவா மருத்துவக் கல்லூரியில் சிறப்பு பல்நோக்கு கட்டிடத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, கோவாவில் 650 கோடி  மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை திறந்து வைப்பதுடன் அடிக்கல் நாட்டுகிறார்.

கோவா சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி கோவா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்..  மத்திய அரசை நாங்கள் நேரடியாக கட்டுப்படுத்தவில்லை - ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சு
Tags:    

Similar News