search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
    X
    ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

    மத்திய அரசை நாங்கள் நேரடியாக கட்டுப்படுத்தவில்லை - ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சு

    மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக இருப்பதாக அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் குற்றம்சாட்டியுள்ளார்.
    தர்மசாலா

    பாஜக தலைமையிலான மத்திய அரசை ஆர்.எஸ்.எஸ் நேரடியாக கட்டுப்படுத்தவில்லை என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். இமாச்சலப் பிரதேசம் தர்மசாலாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய அவர் கூறியதாவது: -

    மத்திய அரசின் நிர்வாகிகள், கொள்கைகள் அனைத்தும் வேறு. ஆர்.எஸ்.எஸ்-யின் முக்கிய நபர்கள் அரசாங்கத்தில் பணியாற்றுகின்றனர். ஆனால் ஊடகங்கள் சொல்வது போல ஆர்.எஸ்.எஸ் நேரடியாக மத்திய அரசை கட்டுப்படுத்தவில்லை.

    மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராகவுள்ளது. எங்களுக்கு எப்போதும் எதிரிகள் உள்ளனர். ஆர்எஸ்எஸ் அமைப்பு 96 வருடங்களாக பல தடைகளை தாண்டி செயல்பட்டு வருகிறது. சமூகத்திற்கு ஒரு தேவை என வரும்போது நாங்கள் அமைதியாக அமர்ந்திருக்க மாட்டோம். உடனடியாக களத்தில் இறங்கி பணியாற்றுவோம். நாங்கள் பாராளுமன்றத்தை மட்டும் நடத்தவில்லை, மக்களுடன் இணைந்து தன்னிச்சையாக சுதந்திரமாக செயல்படுகிறோம் என்பதை உணர்த்தியிருக்கிறோம். எந்த விளம்பரமும், பொருளாதார தேவையும், அரசாங்கத்தின் துணையும் இன்றி பணி செய்து வருகிறோம்.

    இந்திய மக்களின் மரபணு 40,000 ஆண்டுகளாக மாறாமல் இருக்கிறது. நாம் அனைவருக்கும் ஒரே மூதாதையர் தான். அவர்களால் தான் நமது நாடு செழிப்புடனும், கலாச்சாரத்துடனும் இன்றும் பிரகாசிக்கிறது.

    இவ்வாறு மோகன் பகவத் கூறினார்.
    Next Story
    ×