இந்தியா
ராகுல் காந்தி கட்அவுட்

மறைந்த ராணுவ வீரர்களை அரசியலுக்காக பயன்படுத்துகிறார் ராகுல் காந்தி -பாஜக குற்றச்சாட்டு

Published On 2021-12-16 12:50 GMT   |   Update On 2021-12-16 12:50 GMT
நாட்டிற்காக உயிர் நீத்த ராணுவ வீரர்களின் புகைப்படங்களை ராகுல் காந்தி தனது அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொள்வதாக என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
டேராடூன்:

1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உள்ளிட்டோரின் கட் அவுட்டுகளுடன், குன்னூர் ஹெலிகாப்டர்
விபத்தில் உயிரிழந்த முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத்தின் புகைப்படமும் வைக்கப்பட்டிருந்தது. 

மேலும் நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களை நினைவுக்கூறும் வகையில் அவர்களது புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ராகுல் காந்தியின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. 

இவற்றை சுட்டிக்காட்டிய பாஜக, ‘நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் புகைப்படங்களை ராகுல் காந்தி தனது அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறார். மறைந்த ராணுவ வீரர்களின் புகைப்படங்களுடன் ராகுல்காந்தி சிரித்துக்கொண்டு இருக்கும் புகைப்படமும் இடம்பெற்றிருப்பது கண்டனத்துக்குரியது’ என விமர்சித்துள்ளது.
Tags:    

Similar News