இந்தியா
வாரணாசியில் நடைபெற்ற கங்கா ஆரத்தி

வாரணாசி நதிக்கரையில் கங்கா ஆரத்தி... கண்கவர் லேசர் காட்சியை கண்டுகளித்த பிரதமர்

Published On 2021-12-13 17:31 GMT   |   Update On 2021-12-13 17:31 GMT
வாரணாசி கங்கா ஆரத்தி நிகழ்ச்சியையொட்டி கங்கை கரை படிக்கட்டுக்கள் முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
வாரணாசி:

உத்தர பிரதேசத்தில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தை திறந்து வைத்தார்.  இதன் தொடர்ச்சியாக இரவு கங்கை நதிக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கங்கை கரை படிக்கட்டுக்கள் முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. 


நவீன படகு மூலம் கங்கை நதியில் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி ஆரத்தி நிகழ்ச்சியை கண்டு ரசித்தார். உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் உடன் சென்றனர். முன்னதாக லேசர் ஒளிக்கதிர் மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியையும் பிரதமர் மோடி கண்டு ரசித்தார். கங்கா ஆரத்தி நிகழ்ச்சியையொட்டி கங்கை நதிக்கரையில் இருந்து காசி விஸ்வநாதர் கோவில் வரை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
Tags:    

Similar News