இந்தியா
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும் - அதிகாரிகளுக்கு உத்தவ் தாக்கரே உத்தரவு

Published On 2021-12-09 04:32 GMT   |   Update On 2021-12-09 04:32 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 18 வயதில் இருந்து 44 வயதுக்குட்பட்டவர்கள் 76.69 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா 2-வது அலையின்போது ஏராளமானோர் பலியானார்கள்.

பின்னர் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டாலும் தற்போது ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து மும்பை திரும்பும் விமான பயணிகள் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு, கண் காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 18 வயதில் இருந்து 44 வயதுக்குட்பட்டவர்கள் 76.69 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட 83.25 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


இந்த சூழ்நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் அதனை தடுக்க மகாராஷ்டிரா முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடந்தது. இதில் புதிய வகை ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது எப்படி என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிந்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்- மந்திரி உத்தவ் தாக்கரே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்...ராணுவ வீரர்களின் குடும்பத்து பெண்கள் நலனுக்காக பாடுபட்ட மதுலிகா ராவத்

Tags:    

Similar News