இந்தியா
ராகுல் காந்தி

விவசாயிகளுக்கு உரிமை வேண்டும்: மத்திய அரசுக்கு ராகுல் வலியுறுத்தல்

Update: 2021-12-07 10:30 GMT
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் பெயர் பட்டியல் தங்களிடம் உள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் விவசாய பிரச்சினை தொடர்பாக பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது 700 விவசாயிகள்  உயிரிழந்துள்ளதாக கூறினார். 

பாராளுமன்றத்தில், போராட்டத்தின்போது எத்தனை விவசாயிகள் உயிரிழந்தார்கள்? என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் கேள்வி கேட்டார். தங்களிடம் அது தொடர்பாக எந்த தகவலும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

உயிரிழந்த 400 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு பஞ்சாப் அரசு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது. மேலும், 152 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.  அவர்களது பெயர்கள் என்னிடம் உள்ளன. ஹரியானாவை சேர்ந்த 70 விவசாயிகளின் பெயர் பட்டியல் எங்களிடம் உள்ளது. ஆனால் உங்கள் அரசாங்கம் சொல்கிறது, தங்களிடம் அவர்களது பெயர் இல்லை என்று என ராகுல்காந்தி தமது பேச்சின்போது குறிப்பிட்டார்.

மூன்று வேளாண் சட்டம் கொண்டு வரப்பட்ட விவகாரத்தில் பிரதமர் தமது தவறை ஒப்புக் கொண்டுள்ளார். இதற்காக தேசத்திடமும், விவசாயிகளிடமும் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார் . விவசாயிகளுக்கு அவர்களது உரிமைகள் வழங்கப்பட வேண்டும். மேலும் இழப்பீடு மற்றும் வேலை வாய்ப்பும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டார்.
Tags:    

Similar News