இந்தியா
கொரோனா வைரஸ்

கர்நாடகாவில் மேலும் 2 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-12-04 09:41 GMT   |   Update On 2021-12-04 11:01 GMT
பெங்களூரில் நடந்த சர்வதேச அளவிலான மருத்துவ மாநாட்டில் பங்கேற்ற மேலும் 2 டாக்டர்களின் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பெங்களூர்:

கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் ஒருவர் பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் ஆவார். இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் கடந்த மாதம் பெங்களூரில் நடந்த சர்வதேச அளவிலான மருத்துவ மாநாட்டில் பங்கேற்றவர்.

இந்த நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்ற மேலும் 2 டாக்டர்களின் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 


பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. 3 டாக்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதையும் படியுங்கள்... நிபுணர் குழு பரிந்துரைத்தால் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும்- மத்திய அரசு முடிவு

Tags:    

Similar News