இந்தியா
29 நாடுகளில் பரவிய ஒமிக்ரான் பாதிப்பு

உலகம் முழுவதும் 29 நாடுகளில் பரவிய ஒமிக்ரான் பாதிப்பு

Published On 2021-12-02 14:03 GMT   |   Update On 2021-12-02 14:03 GMT
தென்ஆப்பிரிக்காவில் முதன்முறையாக ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது.
புதுடெல்லி:

கொரோனா பாதிப்புகள் உலக அளவில் தீவிர அச்சுறுத்தலாக தொடர்ந்து வரும் நிலையில், தடுப்பூசி பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.  இதனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்டு இருந்த உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப முயன்று வருகின்றன.

இந்த நிலையில், தென்ஆப்பிரிக்காவில் முதன்முறையாக ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் உலகம் முழுவதுமுள்ள அரசுகள் தொற்று பாதித்த நாடுகளுடனான விமான சேவையை ரத்து செய்தன.

இந்தியாவின் கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இந்த நிலையில், உலகம் முழுவதும் மொத்தம் 29 நாடுகளில் ஒமிக்ரான் பரவி 373 பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.  இவற்றில் தென்ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் அடங்கும். சமீபத்தில் இந்த பட்டியலில் கானா, நைஜீரியா, நார்வே, சவுதி அரேபியா மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவல் ஏற்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்...
Tags:    

Similar News