செய்திகள்
இந்தூர் நகரத்திற்கான விருதை ஜனாதிபதி வழங்கிய காட்சி

நாட்டின் தூய்மையான நகரம்- 5வது முறையாக விருது பெற்றது இந்தூர்

Published On 2021-11-20 10:47 GMT   |   Update On 2021-11-20 13:20 GMT
100 உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேல் உள்ள மாநிலங்களில் மிகவும் தூய்மையான மாநிலம் என்ற பெருமையை சத்தீஸ்கர் பெற்றுள்ளது.
புதுடெல்லி:

தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் நகரங்களின் தூய்மை, சுகாதாரம் மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு தூய்மையான நகரங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டிற்கான தூய்மையான நகரங்கள் குறித்த கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடந்தது.  4,320 நகரங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று விருதுகளை வழங்கினார்.

இதில், நாட்டின் மிக தூய்மையான நகரம் என்ற பெருமையை மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் பெற்றுள்ளது. அதற்கான விருதை ஜனாதிபதி வழங்கினார். இதன்மூலம் ஐந்தாவது முறையாக தூய்மைக்கான விருதை பெற்றுள்ளது. குஜராத்தின் சூரத் நகரம் இரண்டாவது இடத்தையும், ஆந்திராவின் விஜயவாடா மூன்றவாது இடத்தையும் பிடித்தது.



100 உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேல் உள்ள மாநிலங்களில் சத்தீஸ்கர் முதலிடத்தையும், மஹாராஷ்டிரா 2வது இடத்தையும் மத்திய பிரதேசம் 3வது இடத்தையும் பிடித்தன. இதேபோல் கங்கை கரையோர நகரங்களில் தூய்மையான நகரமாக வாரணாசி தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருதுகளையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். 

Tags:    

Similar News