search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மை நகரம்"

    • இந்தூர் 7 ஆயிரத்து 146 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்தது.
    • குஜராத்தின் சூரத் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

    மதுரை :

    மத்திய அரசின் வீடு மற்றும் நகர்ப்புற அமைச்சகம், 'ஸ்வச் சர்வேக்‌ஷன்' திட்டத்தின் கீழ் கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உள்ள தூய்மையான நகரங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    அதில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் மொத்தம் 45 நகரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

    அதில் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் 7 ஆயிரத்து 146 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்தது. 6 ஆயிரத்து 924 மதிப்பெண்களுடன் குஜராத்தின் சூரத் 2-வது இடத்தையும், 6 ஆயிரத்து 852 மதிப்பெண் எடுத்து மும்பையின் நவி மும்பை 3-வது இடத்தையும் பிடித்தன. அதில் கோவை 42-வது இடத்தையும், சென்னை 44-வது இடத்தையும், கடைசி இடமான 45-வது இடத்தை மதுரையும் பெற்றுள்ளன.

    கடந்த 2016-ம் ஆண்டு மொத்தம் இந்தியாவில் 73 நகரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அந்த ஆண்டில் முதல் இடத்தை மைசூரும், சண்டிகர் 2-வது இடத்தையும், திருச்சி 3-ம் இடத்தையும் பிடித்தன. கோவை 18-வது இடத்தையும், மதுரை 26-வது இடத்தையும், சென்னை 37-வது இடத்தையும் பிடித்தன.

    2017-ம் ஆண்டு 434 நகரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் முதலிடத்தை இந்தூரும், 2-ம் இடத்தை போபாலும், 3-வது இடத்தை விசாகபட்டினமும் பிடித்தன.

    2021-ம் ஆண்டு 1 லட்சத்திற்கு மேலான மக்கள் தொகை கணக்கீட்டின்படி பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் இந்தூர் முதலிடத்தையும், சூரத் 2-வது இடத்தையும், நவி மும்பை 3-வது இடத்தையும் பிடித்தன. இந்த பட்டியலில் தமிழக நகரங்கள் எதுவும் இடம் பெறவில்லை.

    • தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • தூய்மையாக பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் செல்வராஜ் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட துணி பைகளை பொதுமக்களுக்கு வழங்கினர் .

    பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர் . இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் திருப்பூர் மாநகரை தூய்மையாக பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

    பள்ளி மாணவிகளுக்கு மக்கும், மக்கா குப்பையை பிரித்து வழங்கும் வகையில் குப்பை பாக்சை செல்வராஜ் எம்.எல்.ஏ., தினேஷ்குமார் அருகில் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் மற்றும் பலர் உள்ளனர்.

    • சிறப்பு விருந்தினராக ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டார்.
    • தூய்மை நகரமாக மாற்ற உறுதிமொழி ஏற்பு.

    செய்யாறு:

    முதல்வர் ஆணைக்கிணங்க நகர தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற வகையில் வருடம் முழுவதும் தூய்மை பணியினை நடை முறைப்படுத்தும் தொடக்க விழா நேற்று ஆரணி கூட்டு ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகரமன்ற தலைவர் மோகன் வேலு முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் ரகுராம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஜோதி எம்.எல்.ஏ இதில் கலந்துகொண்டார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் செய்யாறு நகரம் தூய்மை நகரமாக மாற்றும் பொருட்டு தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் நகரை தூய்மை சேவைப் பணி விழிப்புணர்வு ஊர்வலத்தை எம்எல்ஏ ஜோதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள், அனைத்து வியாபாரிகள் சங்கம், ஓட்டல் உரிமையாளர் சங்கம், அரிமா சங்கம், நகராட்சி அனைத்து பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×