செய்திகள்
விருது பெற்றவர்களுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

பத்ம விருதுகள் வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

Published On 2021-11-08 18:03 GMT   |   Update On 2021-11-08 18:03 GMT
தலைநகர் டெல்லியில் நடந்த பத்ம விருது வழங்கும் விழாவில் 16 பேர் மரணத்திற்குப் பின் விருது பெற்றவர்கள்.
புதுடெல்லி:

கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

இதற்கிடையே, 2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 119 பேருக்கு வழங்கப்பட்டது. இந்தப் பட்டியலில் 7 பத்ம விபூஷன், 10 பத்ம பூஷன் மற்றும் 102 பத்மஸ்ரீ விருதுகள் உள்ளன. 

இந்நிலையில், டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கினார். 
விருது பெற்றவர்களில் கங்கனா ரணாவத், அட்னான் சாமி, ஏக்தா கபூர், கரண் ஜோஹர் மற்றும் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோரும் அடங்குவர்.

Tags:    

Similar News