செய்திகள்
கிரண் கோசாவி

ஆர்யன் கான் வழக்கு: முக்கிய சாட்சியாக கருதப்படும் கிரண் கோசாவி புனே போலீசாரால் கைது

Published On 2021-10-28 04:24 GMT   |   Update On 2021-10-28 05:13 GMT
ஆர்யன் கான் ஜாமீன் மனு மீதான விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த கைது நடவடிக்கையை போலீசார் எடுத்துள்ளனர்.
ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கடந்த 2-ந்தேதி தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்து நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், அப்போது ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் என்.சி.பி. குற்றம்சாட்டியது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கிரண் கோசாவி கருதப்படுகிறார். கடந்த இரண்டு நாட்களாக மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆர்யன் கான் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. மனு குறித்து நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை.

இந்த நிலையில் புனே போலீசார் கிரண் கோசாவியை கைது செய்துள்ளது. 2018-ல் பண மோசடியில் ஈடுபட்டதாக கிரண் கோசாவி மீது ஏற்கனவே வழக்கு உள்ளது. 2019-ம் ஆண்டு போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.



அதன்பின் சொகுசு கப்பல் போதைப்பொருள் சோதனையின் என்.சி.பி.யின் சாட்சியாக கருதப்படும் நிலையில், பொதுவெளியில் தென்பட்டதால் புனே போலீசார் கைது செய்துள்ளனர். அக்டோபர் 14-ந்தேதி அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டிருந்தனர்.
Tags:    

Similar News