செய்திகள்
பிரதமர் மோடி

தூய்மை இந்தியா திட்டத்தின் ‘நகர்ப்புறம் 2.0’: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

Published On 2021-09-30 19:21 GMT   |   Update On 2021-09-30 19:21 GMT
குப்பை இல்லாத நகர்ப்புறம் என்பதை நோக்கி செல்ல வேண்டும் என்ற வகையில் உருவாக்கப்பட்ட திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதும் மகாத்மா காந்தியின் 150-வது  பிறந்த நாளை கொண்டாட இருக்கும் தருணத்தில் தூய்மையான இந்தியா அவருக்கு  அஞ்சலி செலுத்துவதாக அமையும் என்று 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் நாள் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார்.

குப்பை இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். இதனால் மக்கள் அனைவரும் தங்களுடைய பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், இது மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும் என்று கெட்டுக்கொண்டார். இதை பிரபலப்படுத்த நட்சத்திரங்களை தூதர்களாக நியமித்தார். இந்த இயக்கம் மக்கள் இயக்கமாக மாறியது.



இந்த நிலையில் குப்பை இல்லாத நகரங்களை உருவாக்கும் பொருட்டு தூய்மை இந்தியாவின் நகர்ப்புறம் 2.0 (Swachh Bharat Mission-Urban 2.0) திட்டத்தை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார். அதேபோல் தண்ணீர் பாதுகாப்பு திட்டமான அம்ருட் 2.0 திட்டத்தையும் தொடங்கி வைக்க இருக்கிறார்.

Tags:    

Similar News