செய்திகள்
கொரோனா வைரஸ்

அடுத்த 10 நாட்களில் கொரோனா தொற்று குறையும்- சுகாதார மந்திரி தகவல்

Published On 2021-09-01 06:02 GMT   |   Update On 2021-09-01 07:53 GMT
லேசான அறிகுறியுடன் வருவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுவதால் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் விரைவில் குணமாகி வீடு திரும்புவதாக சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் அதிகரித்தது.

கடந்த சில நாட்களாக நாட்டின் தினசரி கொரோனா தொற்று கண்டறியப்பட்டோர் எண்ணிக்கையில் பாதிக்கும் அதிகமானோர் கேரளாவில் இருந்தனர். கடந்த ஒரு வாரமாகவே கேரளாவில் கொரோனா பாதிப்பு மிக அதிக அளவில் இருந்தது.

நேற்றும் கேரளாவில் 30 ஆயிரத்து 203 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர். தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது.

அதன்படி மாநிலம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு
தடுப்பூசி
போடும் பணி தீவிரமாக நடந்தது. இதுவரை 88 லட்சத்து 23 ஆயிரத்து 524 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதில் 70 லட்சத்து 89 ஆயிரத்து 202 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 17 லட்சத்து 34 ஆயிரத்து 322 பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ளனர்.



கேரளாவில் கொரோனா பரவல் குறித்து சுகாதாரத்துறை மந்திரி வீனாஜார்ஜ் கூறியதாவது:-

கேரளாவில் கொரோனா பரிசோதனை அதிக அளவில் நடத்தப்படுகிறது. இதனால் நோய் பாதிப்பு இருப்போர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கேரளாவில் தான் கொரோனாவால் உயிர் இழப்போர் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

லேசான அறிகுறியுடன் வருவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுவதால் அவர்கள் விரைவில் குணமாகி வீடு திரும்பி வருகிறார்கள். அடுத்த 10 நாட்களில் கேரளாவில் கொரோனா பரவல் மிகவும் குறைந்து விடும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News