செய்திகள்
ராகுல் காந்தி

ஜாலியன் வாலாபாக் தியாகிகளுக்கு அவமானம் - மத்திய அரசுமீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published On 2021-08-31 23:27 GMT   |   Update On 2021-08-31 23:27 GMT
ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை புதுப்பித்ததன் மூலம் தியாகிகளை மத்திய அரசு அவமதித்துள்ளது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
புதுடெல்லி:

ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தைப் புனரமைப்பு செய்து புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இந்த நினைவுச் சின்னத்தில் உள்ள டிஜிட்டல் முறையிலான அருங்காட்சியகத்தையும் பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

இந்நிலையில், மத்திய அரசு தியாகிகளை அவமதித்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஜாலியன் வாலாபாக் தியாகிகளுக்கு இத்தகைய அவமானம், தியாகத்தின் பொருள் தெரியாதவர்களால் மட்டுமே செய்ய முடியும். 

நான் ஒரு தியாகியின் மகன். தியாகிகளின் அவமானத்தை எந்த வகையிலும் பொறுத்துக்கொள்ள மாட்டேன். இந்த அநாகரிக கொடுமைக்கு நாங்கள் எதிரானவர்கள் என பதிவிட்டுள்ளார். 
Tags:    

Similar News