செய்திகள்
மீட்பு பணி

இமாச்சல பிரதேச நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 25 ஆனது

Published On 2021-08-16 11:31 GMT   |   Update On 2021-08-16 11:31 GMT
நிலச்சரிவில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் ஜெய்ராம் தாகூர் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சிம்லா:

இமாச்சலப் பிரதேசத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த 11ம் தேதி கின்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சரக்கு வாகனம், பேருந்து உள்ளிட்ட சில வாகனங்கள் சிக்கிக்கொண்டன. அந்த வாகனங்களில் இருந்தவர்களில் பலர் இடிபாடுகளில் புதைந்தனர். இந்தோ - திபெத் எல்லை காவல் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று வரை 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எனவே, பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இத்கவலை பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

நிலச்சரிவில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் ஜெய்ராம் தாகூர் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும், மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்வார் என்றும் அவர் தெரிவித்தார். 
Tags:    

Similar News