செய்திகள்
கோப்பு படம்

ஆந்திராவில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு

Published On 2021-08-15 15:08 GMT   |   Update On 2021-08-15 15:08 GMT
ஆசிரியர்களுக்கு நூறு சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதால், படிப்படியாக மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.  அந்த வகையில், மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.



அதேபோல் சித்தூர் மாவட்டத்திலும் நாளை (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகளில் கோவிட் விதிமுறைகளை கடைப்பிடித்து வகுப்புகள் நடத்தப்படும். ஆசிரியர்களுக்கு நூறு சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்படும் எனக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News