செய்திகள்
பாஜக

கடந்த 4 ஆண்டுகளில் பா.ஜனதாவுக்கு தேர்தல் நன்கொடை 10 மடங்கு அதிகரிப்பு

Published On 2021-08-10 09:05 GMT   |   Update On 2021-08-10 09:05 GMT
2019-20 நிதியாண்டில் எவ்வளவு பணம் கிடைத்தது என்பது பற்றிய விவரங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் கமி‌ஷனிடம் தாக்கல் செய்துள்ளன.
புதுடெல்லி:

அரசியல் கட்சிகள் தேர்தல் செலவுகளுக்கு நன்கொடை வசூலித்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

இதற்காக தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு யார் வேண்டுமானாலும் நன்கொடையாக அளிக்கலாம். அது யாரிடம் இருந்து வந்தது என்ற விவரங்களை அரசியல் கட்சிகள் சொல்ல வேண்டியது இல்லை. எவ்வளவு பணம் கிடைத்தது என்பது பற்றிய விவரங்களை மட்டும் தேர்தல் கமி‌ஷனிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

அந்தவகையில் 2019-20 நிதியாண்டில் எவ்வளவு பணம் கிடைத்தது என்பது பற்றிய விவரங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் கமி‌ஷனிடம் தாக்கல் செய்துள்ளன.

அதில் பா.ஜனதாவுக்கு மிக அதிகமாக ரூ.3,623 கோடி கிடைத்துள்ளது. 2018- 19-ல் ரூ.2,410 கோடி கிடைத்தது.

ஒரு ஆண்டில் மட்டுமே 50 சதவீதத்துக்கு மேல் நன்கொடை அதிகமாக கிடைத்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு ரூ.682 கோடிதான் நன்கொடை கிடைத்து இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியுடன் ஒப்பிடும்போது பா.ஜனதாவுக்கு 5 மடங்கு அதிகமாக நன்கொடை வந்துள்ளது.

2017-ம் ஆண்டை ஒப்பிடும் போது 4 ஆண்டுகளில் பா.ஜனதாவுக்கு 10 மடங்கு அதிகமாக தேர்தல் நன்கொடை வந்து இருக்கிறது.

2018- 19-ல் பா.ஜனதா ரூ.792 கோடி தேர்தல் செலவு செய்துள்ளது. 2019- 2020-ல் செலவு ரூ.1,352 கோடியாக அதிகரித்துள்ளது. காங்கிரஸ் ரூ.998 கோடி செலவு செய்து இருக்கிறது.

கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் ரூ.29 கோடி, திரிணாமுல்காங்கிரஸ் 100 கோடி, தி.மு.க. ரூ.45 கோடி, சிவசேனா ரூ.42 கோடி, ஆம்ஆத்மி ரூ.18 கோடி நன்கொடைகளை பெற்று இருக்கிறது.
Tags:    

Similar News