செய்திகள்
கொரோனா வைரஸ்

நாடு முழுவதும் 47 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதம்

Published On 2021-07-17 02:46 GMT   |   Update On 2021-07-17 02:46 GMT
தடுப்பூசிகள் வலிமை வாய்ந்தவை, மிகவும் பாதுகாப்பானவை. இணை நோயுடன் போராடுகிறவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை முடிவுக்கு கொண்டு வர இந்தியா தீவிரமாக போராடி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 15-ந்தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 47 மாவட்டங்களில் மட்டுமே தினசரி பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது. இந்த மாநிலங்கள் மணிப்பூர், கேரளா, ராஜஸ்தான், மேகாலயா, மிசோரம், அருணாசலபிரதேசம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா, அசாம், மகாராஷ்டிரா, புதுச்சேரி ஆகும்.

14-ந் தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் 73 மாவட்டங்களில் மட்டுமே 100-க்கும் மேற்பட்ட தினசரி பாதிப்பு பதிவாகி இருக்கிறது.



இதையொட்டி நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் கூறுகையில், “எங்களது தடுப்பூசிகள் வலிமை வாய்ந்தவை, மிகவும் பாதுகாப்பானவை. இணை நோயுடன் போராடுகிறவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டார்.


Tags:    

Similar News