செய்திகள்
பிரதமர் மோடி

மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.23000 கோடி சிறப்பு தொகுப்பு -மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published On 2021-07-08 17:37 GMT   |   Update On 2021-07-08 17:37 GMT
தேங்காய் வளர்ச்சி வாரியத்தின் தலைவர் பதவியை அதிகாரவர்க்கம் சாரா தலைவர் பதவியாக மாற்றுவதற்கு தேவையான சட்டத் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டு, 43 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர். அவர்களின் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு,  அனைவரும் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. 

இக்கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக ரூ. 23 ஆயிரம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.



வேளாண் உற்பத்தி பொருட்கள் சந்தை குழுக்களை வலுவாக்கப்படும் என்றும், விவசாயிகள் கட்டமைப்பு நிதிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் இதற்கு பயன்படுத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

தேங்காய் வளர்ச்சி வாரியத்தின் தலைவர் பதவியை அதிகாரவர்க்கம் சாரா தலைவர் பதவியாக மாற்றுவதற்கு தேவையான சட்டத் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் கீழ் நிதி வசதி வழங்கும் மத்தியத் துறை திட்டத்தில் மாற்றங்கள் செய்தல், இந்திய போட்டியியல் ஆணையம் மற்றும் ஜப்பான் நியாய வர்த்தக ஆணையத்திற்கிடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகியவற்றுக்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

Tags:    

Similar News