செய்திகள்
கைது

உ.பி.யில் மாநில செயலக அதிகாரி போல் நடித்து மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

Published On 2021-06-13 00:08 GMT   |   Update On 2021-06-13 00:08 GMT
உத்தர பிரதேசத்தில் பல ஆண்டாக அரசு அதிகாரி போல் நடித்து மோசடியில் ஈடுபட்ட நபர் போலீசில் சிக்கினார்.
லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலத்தின் லக்னோ நகரில் பிருந்தாவன் பகுதியில் வசித்து வருபவர் ஹிமான்சு சுக்லா. பி.டெக் படித்தவரான இவர் தொடக்கத்தில் சில நிறுவனங்களில் பணிபுரிந்து வந்துள்ளார். இதன்பின் இவருக்கு மாநில செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுடன் தொடர்பு ஏற்பட்டது.

இதனால் ஒப்பந்த அடிப்படையில் செயலகத்தில் பணிபுரியும் சந்தர்ப்பம் அமைந்தது. 2 ஆண்டுகளில் அவருக்கு பலரது அறிமுகம் கிடைத்தது. செயலக அதிகாரி என தன்னை காட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றி பணம் ஈட்டலாம் என அவருக்கு யோசனை உதித்துள்ளது.

அதன்படி, தனது போலியான அடையாளம் வழியே மண்டல அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து சட்டவிரோத வகையில் பணிகளை முடித்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவரை கைதுசெய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து போலி அடையாள அட்டை, மொபைல் போன் ஒன்று, போலியான நியமன கடிதம் ஒன்று, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம் மற்றும் ரூ.1100 பணம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News