செய்திகள்
கர்நாடகத்தில் கருப்பு பூஞ்சையால் பாதித்தோர்

கர்நாடகத்தில் கருப்பு பூஞ்சையால் பாதித்தோர் எண்ணிக்கை 1,370 ஆக உயர்வு

Published On 2021-06-02 02:47 GMT   |   Update On 2021-06-02 02:47 GMT
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களில் சிலரை கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,370 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு :

கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களில் சிலரை கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. மாநிலத்தில் 1,250 பேருக்கு அந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த நிலையில் மேலும் 120 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதன் மூலம் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,370 ஆக அதிகரித்துள்ளது.

இதில் இதுவரை 51 பேர் உயிரிழந்து உள்ளனர். 27 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,292 பேர் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்கள். அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 557 பேருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாகல்கோட்டையில் 70 பேரும், பெலகாவியில் 47 பேரும், பெங்களூரு புறநகரில் 20 பேரும், சித்ரதுர்காவில் 34 பேரும், தட்சிண கன்னடாவில் 35 பேரும், தாவணகெரேயில் 26 பேரும், தார்வாரில் 156 பேரும், கலபுரகியில் 104 பேரும், கோலாரில் 43 பேரும், மைசூருவில் 35 பேரும், ராய்ச்சூரில் 46 பேரும், சிவமொக்காவில் 38 பேரும், விஜயாப்புராவில் 57 பேரும் அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் அதிகபட்சமாக தார்வாரில் 14 பேர் உள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News