செய்திகள்
முதல் மந்திரி எடியூரப்பா

கர்நாடகாவில் ஜூன் 7 வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதல் மந்திரி எடியூரப்பா

Published On 2021-05-21 18:02 GMT   |   Update On 2021-05-21 18:03 GMT
கர்நாடக மாநிலத்தில் இதுவரை 23,67,742 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கர்நாடக மாநிலத்திலும் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக கர்நாடக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 24-ம் தேதியோடு முடிவடைகிறது.

இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்தில் முழு ஊரடங்கு வரும் ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு, எடியூரப்பா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த ஊரடங்கு காலத்தில் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News