செய்திகள்
மழை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற 31-ந் தேதியே தொடங்கும்

Published On 2021-05-15 09:12 GMT   |   Update On 2021-05-15 09:12 GMT
அந்தமான் கடலில் ஏற்பட்ட மாற்றமும், அங்கிருந்து வீசும் காற்றின் தன்மையும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி:

கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கும்.

இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை காலத்தில்தான் அதிக அளவு மழை பொழிவு கிடைக்கும். ஜூன் மாதம் தொடங்கும் மழை செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.

அந்தமான் கடல் பகுதியில் ஏற்படும் வானிலை மாற்றத்தை கணக்கிட்டும், அங்கிருந்து வீசும் காற்றின் தன்மையை கொண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதை வானிலை ஆய்வு மையம் கணிக்கும்.

இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவ மழை ஜூன் 1-ந் தேதி தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியிருந்தது. ஆனால் இப்போது அந்தமான் கடலில் ஏற்பட்ட மாற்றமும், அங்கிருந்து வீசும் காற்றின் தன்மையும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி வருகிற 31-ந் தேதியே தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

தென்மேற்கு பருவ மழை காலத்தில் குமரி மாவட்டத்திலும் நல்ல மழை பொழிவு இருக்கும்.

இங்குள்ள அனைத்து அணைகளும் தென்மேற்கு பருவ மழை காலத்தில் நிரம்பி வழியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News