செய்திகள்
கோப்புப் படம்

மிசோரமில் மே 24 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Published On 2021-05-14 22:29 GMT   |   Update On 2021-05-14 22:29 GMT
மிசோரம் மாநிலத்தில் மே 24 -ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்வால்:

மிசோரம் மாநிலத்தில் கடந்த  24 மணி நேரத்தில் 201 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,377- ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2060-ஆக உள்ளது.

மிசோரமில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 10-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. மே 17-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்க்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மிசோரமில் மேலும் 7 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மே 24-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.  

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு தொடர்வதால் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் அவசியம் இன்றி வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது என மாநில மக்களுக்கு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
Tags:    

Similar News