செய்திகள்
சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின்

டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது- சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின்

Published On 2021-05-11 10:11 GMT   |   Update On 2021-05-11 10:11 GMT
வைரஸ் பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் மே 17ம் தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் டெல்லியில் கடந்த சில நாடகளாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. அதேசமயம் ஆக்சிஜன் பற்றாக்குறை, மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் சுகாதாரத்துறை கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் மே 17ம் தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் டெல்லியில் கடந்த சில நாடகளாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.



இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்று அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

கடந்த சில நாட்களில் டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 36% முதல் 19.1% வரை குறைந்துள்ளது, ஒரு நாள் கொரோனா பாதிப்பு 28,000 லிருந்து 12,500 வரை குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதத்தை 5% க்கும் குறைவாக்கும் வரை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கபடும்.

இந்த அலை மிகவும் அதிகமாக உள்ளது, ஆனால் ஏப்ரல் இறுதி முதல் அதன் உச்சம் படிப்படியாக குறைந்து வருகிறது. தினமும் சுமார் 80,000 கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ஊரடங்கு காரணமாக, மக்கள் வெளியே வரவில்லை. ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளுக்கான தேவை இப்போது குறைந்துள்ளது. சுமார் 23,000 படுக்கைகள் உள்ளன, அதில் 20,000 பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆக்ஸிஜன் வழங்கி வருவதை தொடர்ந்து வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News