செய்திகள்
கோப்புப்படம்

5ஜி சேவை பரிசோதனையால் கொரோனா பரவுவதாக வதந்தி

Published On 2021-05-10 01:35 GMT   |   Update On 2021-05-10 01:35 GMT
செல்போன்களில் 5ஜி சேவையை பரிசோதனை செய்வதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது
லக்னோ:

செல்போன்களில் 5ஜி சேவையை பரிசோதனை செய்வதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்த நிலையில் இந்த பரிசோதனையால் எழுந்துள்ள கதிர்வீச்சினால்தான் நாட்டில் குறிப்பாக உத்தரபிரதேசத்தில் தற்போது கொரோனா அதிகரித்து வருவதாக அந்த மாநிலத்தில் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரப்பப்படுகின்றன.

அத்துடன் இது தொடர்பான ஆடியோ பதிவு ஒன்றும் வாட்ஸ்-அப் தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் 5ஜி செல்போன் டவர்கள் உடைக்கப்பட்டது, மூடப்பட்டது போன்ற படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

இந்த வதந்தியால் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இத்தகைய வதந்திகளை பரப்பும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் களத்தில் இறங்கியுள்ளனர். இந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர்கள், டி.ஐ.ஜி.க்கள், எஸ்.பி.க்களுக்கு மாநில கூடுதல் டிஜி.பி. பிரசாந்த் குமார் கடிதம் எழுதியுள்ளார்.
Tags:    

Similar News