செய்திகள்
தடுப்பூசி போடும் பணி

மாநிலங்களுக்கு இதுவரை இலவசமாக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் எவ்வளவு? -மத்திய அரசு தகவல்

Published On 2021-04-29 08:10 GMT   |   Update On 2021-04-29 15:04 GMT
மாநிலங்களில் தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் இருப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை, உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளதால் நோய்த் தடுப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் தடுப்பூசிகள் காலியாகிவிட்டதாகவும், எனவே, தடுப்பூசி திட்டம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியதாக ஊடகத்தில் செய்தி வெளியானது.

இதற்கு மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்திற்கு இதுவரை (ஏப்ரல் 29 காலை 8 மணி வரை) 1,63,62,470 டோஸ்கள் தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை கூறி உள்ளது. அதில், வீணான மருந்து உள்பட மொத்தம் 1,56,12,510 டோஸ் மருந்துகள் பயன்படுத்தப்பட்டதாகவும், 7,49,960 டோஸ் மருந்து தற்போது கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.



மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கு இதுவரை 16.16 கோடி கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதில், வீணான மருந்து உள்பட 15,10,77,933 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1,06,08,207 மருந்துகள் இருப்பில் உள்ளன. அடுத்த மூன்று நாட்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மேலும் 20,48,890 டோஸ் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படும்’ என்றும் சுகாதாரத்துறை கூறி உள்ளது.
Tags:    

Similar News