search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Covid19 Vaccine"

    கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை காக்கவும், தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தவும்தான் இந்த நடவடிக்கையை சுகாதாரத்துறை எடுத்துள்ளது.
    பாட்னா :

    கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முதல் ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி விட்டு, இரண்டாவது ‘டோஸ்’ தடுப்பூசி போடாமல் தவற விடுபவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்.

    இதனால்தான் பீகாரில் 2-வது ‘டோஸ்’ தடுப்பூசி போட்டுக்கொள்கிறவர்களுக்கு மாபெரும் பரிசுத்திட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள். லாட்டரி குலுக்கல் மூலம் பரிசுக்குரியவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    டி.வி., பிரிட்ஜ், கிரைண்டர், கியாஸ் ஸ்டவ், மின்விசிறி, போர்வை என பரிசுப்பட்டியல் நீளுகிறது.

    இதுகுறித்து அந்த மாநில சுகாதார மந்திரி மங்கள் பாண்டே கூறும்போது, “கொரோனா வைரஸ்   தொற்றில் இருந்து மக்களை காக்கவும், தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தவும்தான் இந்த நடவடிக்கையை சுகாதாரத்துறை எடுத்துள்ளது” என தெரிவித்தார்.

    2 தடுப்பூசிகள் போட்டுக்கொண்டிருந்தால் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் 8-ந் தேதி முதல் (நாளை மறுதினம்) அமெரிக்கா வர அனுமதிக்கப்படுவார்கள்.
    வாஷிங்டன் :

    உலகளவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல பயண கட்டுப்பாடுகளை வெளிநாட்டினருக்கு அமெரிக்கா விதித்திருந்தது.

    தற்போது ஐரோப்பிய நாடுகளை தவிர்த்து பிற நாடுகளில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தள்ளது.

    இந்த நிலையில் கொரோனா கால கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:-

    * 2 தடுப்பூசிகள் போட்டுக்கொண்டிருந்தால் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் 8-ந் தேதி முதல் (நாளை மறுதினம்) அமெரிக்கா வர அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக கொரோனா இல்லை என காட்டுகிற ‘நெகட்டிவ் ’ சான்றிதழை காட்ட வேண்டும். பயணத்துக்கு 3 நாட்கள் முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து இந்த சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

    * தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகள், அவர்கள் அமெரிக்க குடிமக்களாகவோ, நிரந்தர குடியுரிமை பெற்றவர்களாகவோ இருந்தால், ஏற்றுக்கொள்ளப்பட்ட தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத வெளிநாட்டினர் சிறிய குழுவினராக இருந்தால், அவர்கள் புறப்பட்ட ஒரு நாளுக்குள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    * தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சிறுவர், சிறுமியர் தாங்கள் பயணம் செய்கிற பெரியவர்களுடன் அதே நேரத்தில் சோதனை செய்து கொள்ள வேண்டும். ( அதாவது 2 தடுப்பூசிகளும் போட்டுக்கொண்ட பெரியவர்களுடன் பயணத்துக்கு 3 நாட்கள் முன்னதாகவும், தடுப்பூசி போடாத பெரியவர்களுடன் செல்கிறபோது ஒரு நாளுக்குள்ளும்).

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×