செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு

மீண்டும் ஒரு துப்பாக்கி சூட்டை விரும்பவில்லை -ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு வாதம்

Published On 2021-04-23 07:00 GMT   |   Update On 2021-04-23 07:00 GMT
அதிகாரம் இருந்தால், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய சட்டம் மூலம் மத்திய அரசே ஸ்டெர்லைட்டை நடத்தலாமே என தமிழக அரசு தெரிவித்தது.
புதுடெல்லி:

நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள உற்பத்திக்கூடத்தில் ஆக்சிஜனை தயாரித்து இலவசமாக வழங்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின்போது, தமிழக அரசு ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்தது.



உச்ச நீதிமன்ற வாதத்தின்போது தமிழக அரசு தரப்பில் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். ஆலை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, 2018ல் நடந்ததுபோல் தூத்துக்குடியில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு நடக்க அரசு விரும்பவில்லை. 2018ல் சம்பவம் நடந்தாலும், சட்டம் -ஒழுங்கு பிரச்சனை இன்னும் தொடர்கிறது. அதிகாரம் இருந்தால், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய சட்டம் மூலம் மத்திய அரசே ஸ்டெர்லைட்டை நடத்தலாமே.

இவ்வாறு தமிழக அரசு கூறியது.
Tags:    

Similar News