செய்திகள்
தடுப்பூசிக்கு பதிவு செய்யும் பணி (கோப்பு படம்)

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி... ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?

Published On 2021-04-22 09:05 GMT   |   Update On 2021-04-22 09:09 GMT
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மே 1ம் தேதி தொடங்க உள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகளைப் பயன்படுத்தி  பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. விரைவில் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வர உள்ளது. 

கடந்த ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டபோது, முதலில் முன்களப் பணியாளர்களும் சுகாதாரத் துறையினரும் தடுப்பூசி போடப்பட்டது. அதன்பின்னர், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணைநோய்கள் உள்ள 45 வயதைத் தாண்டியவர்களுக்கும் மார்ச் 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டது. ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. 



இந்நிலையில் தடுப்பூசி திட்டத்தை மேலும் விரைவுபடுத்தும் வகையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி மே 1ம் தேதி தொடங்கவிருக்கிறது. தடுப்பூசிக்கான முன்பதிவு நாளை மறுநாள் (ஏப்ரல் 24) தொடங்குகிறது. COWIN வலைதளத்தில் முன்பதிவுசெய்து கொள்ளலாம்.

பயனாளிகள் cowin.gov.in என்ற வலைதளத்திற்குள் சென்று, 10 டிஜிட் செல்போன் எண் அல்லது ஆதார் எண்ணைப் பதிவுசெய்ய வேண்டும். அதன்பின் சம்பந்தப்பட்ட மொபைலுக்கு ஓடிபி வரும். அதனைப் பதிந்தால் வெரிபிகேசன் முடிந்து பதிவு செய்யப்பட்டுவிடும்.

தகவல் சரிபார்க்கப்பட்டதும், தடுப்பூசி பதிவுக்கான பக்கம் திறக்கும். அதில் ஆதார் கார்டு உள்ளிட்டவற்றின் போட்டோ ஆதாரம் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்ய வேண்டும். எந்தத் தேதியில், எந்த மையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வது என்றும் தேர்ந்தெடுக்கலாம். 
Tags:    

Similar News