செய்திகள்
கொரோனா வைரஸ்

அறிகுறி எதுவும் இல்லாமல் கர்நாடகா விடுதியில் 30 குழந்தைகளுக்கு கொரோனா

Published On 2021-04-20 08:40 GMT   |   Update On 2021-04-20 08:40 GMT
மேலும் அங்குள்ள 2 ஆயிரம் குழந்தைகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூர்:

கர்நாடக மாநிலத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் துமகூருவில் உள்ள சித்தங்கா மடத்திற்கு சொந்தமான விடுதி உள்ளது.

இந்த விடுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி படித்து வருகிறார்கள். அங்கு குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சுமார் 30 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

ஆனால் அந்த குழந்தைகளுக்கு அறிகுறி எதுவும் இல்லை என்றும், அதனால் அவர்களை மட்டும் அங்குள்ள விடுதியில் தனிமைப்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.


மேலும் அங்குள்ள 2 ஆயிரம் குழந்தைகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து சித்தகங்கா மடாதிபதி நிருபர்களிடம் கூறுகையில், "கொரோனாவுக்கு குழந்தைகளும், இளைஞர்களும் உயிரிழப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

அனைவரும் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்தும் பொறுப்பு அரசுக்கு மட்டுமின்றி ஒவ்வொருவருக்கும் உள்ளது. அவரவர்கள் அரசின் வழிகாட்டுதலை தீவிரமாக பின்பற்றி உயிர்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்" என்றார்.

Tags:    

Similar News