செய்திகள்
கோப்புப்படம்

மத்திய அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களுக்கே அனுமதி - புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

Published On 2021-04-20 02:05 GMT   |   Update On 2021-04-20 02:05 GMT
நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை தொடர்ந்து மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை தொடர்ந்து மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி துணை செயலாளர் மட்டத்திலான அதிகாரிகள், அதற்கு மேற்பட்ட அதிகாரிகள் தினமும் அலுவலகம் வரவேண்டும். துணை செயலாளருக்கு குறைந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 50 சதவீதத்தினருக்கே அனுமதி அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகளை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கலாம். ஒரே நேரத்தில் அலுவலகத்தில் குவிவதை தடுக்க 9 மணி முதல் 5.30 மணி வரை, 9.30-6 மணி, 10-6.30 மணி என மாற்று பணி நேரம் வழங்க வேண்டும்.

அலுவலகத்துக்கு வராத ஊழியர்கள் எப்போதும் தொலைபேசி அல்லது மின்னணு சாதனங்கள் மூலம் தொடர்பு கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் இருந்து பணியாற்றவும் வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாக கூறியுள்ள மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங், இது வருகிற 30-ந்தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை இருக்கும் எனக்கூறியுள்ளார்.

மேலும் இந்த வழிமுறைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் பின்பற்றும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Tags:    

Similar News