செய்திகள்
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி

கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்

Published On 2021-04-19 22:22 GMT   |   Update On 2021-04-19 22:22 GMT
கொரோனா தடுப்பூசிகளுக்கும், ஆக்சிஜனுக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றின் வினியோகத்தில் மத்திய அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
லக்னோ:

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:-

‘பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்கும், ஆக்சிஜனுக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றின் வினியோகத்தில் மத்திய அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால் அவற்றை உடனடியாக இறக்குமதியும் செய்ய வேண்டும்.’

‘கொரோனா பரவலைத் தடுக்கும்வகையில் கட்டுப்பாடுகளுக்கும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளுக்கும் மக்கள் முறையாக ஒத்துழைக்க வேண்டும் என்று மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன். மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.’

‘கொரோனா தற்போது இளம் வயதினரையும் பாதிக்கத் தொடங்கியிருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். எனவே கொரோனா தடுப்பூசி போடுவதற்கான வயதுவரம்பை மத்திய அரசு விரைவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கிறோம்.’

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News