செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதியில் ரூ.300 கட்டணத்தில் ஜூன் மாத தரிசன டிக்கெட்டுகள் எப்போது வெளியிடப்படும்- பக்தர்கள் எதிர்பார்ப்பு

Published On 2021-04-18 06:40 GMT   |   Update On 2021-04-18 06:40 GMT
கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் மே மாதத்திற்கு பிறகு சாமி தரிசனம் தொடர்ந்து நடைபெறுமா? என்று பக்தர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கொரோனா நாளுக்கு நாள் 2 மடங்காக அதிகரித்து வருகிறது.

திருப்பதியில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 12-ந்தேதி முதல் இலவச தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. ரூ.300 ஆன்லைன் டிக்கெட்டில் தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளன.

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக ரூ.300 டிக்கெட் ஆன்லைனில் மாதம் தோறும் வெளியிடப்பட்டு வருகிறது.

தற்போது மே மாதம் 30-ந்தேதி வரை மட்டுமே ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக 2 மாதத்திற்கு முன்பாகவே டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.

இதனால் கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் மே மாதத்திற்கு பிறகு சாமி தரிசனம் தொடர்ந்து நடைபெறுமா? என்று பக்தர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

ஜூன் மாதத்திற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர்.

Tags:    

Similar News