செய்திகள்
பிரதமர் மோடி

நடிகர் விவேக் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

Published On 2021-04-17 06:48 GMT   |   Update On 2021-04-17 07:49 GMT
தனது படங்களிலும் நிஜ வாழ்க்கையிலும் சுற்றுச்சூழல் மற்றும் சமூகம் மீது அக்கறை காட்டியவர் நடிகர் விவேக் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.
புதுடெல்லி:

நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று காலை 11 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

விருகம்பாக்கத்திலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கின் உடலுக்கு நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படுகிறது என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விவேக் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

* நடிகர் விவேக்கின் திடீர் மரணம் பலரை வேதனையடைய செய்துள்ளது.

* விவேக்கின் காமெடி நடிப்பும், வசன உச்சரிப்பும் மக்களை மகிழ்வித்தன.

* தனது படங்களிலும் நிஜ வாழ்க்கையிலும் சுற்றுச்சூழல் மற்றும் சமூகம் மீது அக்கறை காட்டியவர் நடிகர் விவேக் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.



* படங்கள், சொந்த வாழ்க்கை மூலம் சுற்றுச்சூழல், சமூகத்திற்காக குரல் கொடுத்தவர் நடிகர் விவேக்.

* விவேக்கின் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.


Tags:    

Similar News