செய்திகள்
கோப்புப்படம்

கர்நாடகா, கேரளா, கோவா மாநில கொரோனா தொற்று அப்டேட்ஸ்...

Published On 2021-04-16 13:23 GMT   |   Update On 2021-04-16 13:23 GMT
கர்நாடக மாநிலத்தில் 14,859 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இன்று புதிதாக 14,859 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,031 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 78 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை 11,24,509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,03,985 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 13,190 பேர் உயிரிழந்துள்ளனர். 1,07,315 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கேரளாவில் 10,031 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3792 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 4877 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 11,32,267 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.



கோவாவில் 927 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 282 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அம்மாநிலத்தில் 65,499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News