செய்திகள்
எடியூரப்பா

பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல்

Published On 2021-04-09 03:03 GMT   |   Update On 2021-04-09 03:03 GMT
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூரு உள்பட 8 நகரங்களில் நாளை(சனிக்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. இதற்கான அறிவிப்பை முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிட்டார்.
பெங்களூரு:

நாட்டில் கொரோனா 2-வது அலை வீசத்தொடங்கியுள்ளது. வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. கர்நாடகத்திலும் கொரோனா பாதிப்பும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் இருந்தபடி கலந்து கொண்டார். இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து எடியூரப்பா விவரித்தார். பரிசோதனைகளின் எண்ணிக்கையை லட்சத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாகவும், கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார். மேலும் பிரதமர் கூறும் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாகவும் எடியூரப்பா கூறினார்.

மேலும், கர்நாடகத்தில் 5, 6 மாவட்டங்களில் தான் பரவல் அதிகமாக இருப்பதாகவும், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் முதல்-மந்திரி எடியூரப்பா தொவித்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி கூறிய வழிகாட்டுதல்படி கா்நாடகத்தில் பெங்களூரு உள்பட 8 நகரங்களில் நாளை (சனிக்கிழமை) முதல் 20-ந் தேதி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவா் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“பிரதமர் மோடி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் நான் கலந்துெகாண்டேன். இதில், கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறித்து விவரங்களை எடுத்து கூறினேன். பெங்களூரு உள்பட 6 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. மரண விகிதம் அரை சதவீதமாக உள்ளது. கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். கொரோனா பதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை மட்டும் தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். நடிகா்கள் உள்பட பிரபலமான நபா்கள் மூலம் ெகாரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு மோடி அறிவுறுத்தி உள்ளார்.

பிரதமரின் இந்த ஆலோசனையை தொடர்ந்து கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கலபுரகி, பீதர், துமகூரு, உடுப்பி, மணிப்பால் ஆகிய 8 நகரங்களில் வருகிற 10-ந் தேதி (நாளை) முதல் 20-ந் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த தடையும் இல்லை.

கொரோனா தடுப்பூசி வினியோக இயக்கம் வருகிற 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை மேற்கொள்ளப்படுகிறது. கண்காட்சி, திருவிழா, மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் 6 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி வினியோகம் ெசய்யப்படுகிறது. கர்நாடகத்தில் இதுவரை 53 லட்சம் ேபருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் 30 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள், 42 ஆயிரம் பொது படுக்கைகள், 3 ஆயிரம் தீவிர சிகிச்சை படுக்கைகள், 2,900 செயற்கை சுவாச கருவி இருக்கக்கூடிய படுக்கைகள் இருப்பு உள்ளன. ஆக்சிஜன் உற்பத்தி உபகரணங்கள் வாங்க பிரதமர் கேர் நிதியில் இருந்து நிதி உதவி வழங்குமாறு கேட்டுள்ளேன். கொரோனா பரவலை தடுக்க கர்நாடக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News