செய்திகள்
மந்திரி சுதாகர்

கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்: மந்திரி சுதாகர்

Published On 2021-03-17 02:44 GMT   |   Update On 2021-03-17 02:44 GMT
அண்டை மாநிலங்களில் வைரஸ் தொற்று அதிகமாக இருப்பது தான் கர்நாடகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதற்கு காரணம் என்று மந்திரி சுதாகர் கூறினார்.
பெங்களூரு :

முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று மந்திரி சுதாகர் கூறினார்.

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மராட்டியம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அதனால் தான் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். கொரோனா தடுப்பு விதிமுறைகள் குறித்து ஊடகங்களில் அதிகளவில் விளம்பரம் செய்ய முடிவு செய்துள்ளோம். முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்.

அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். கர்நாடகத்தில் இதுவரை 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் 100 பேருக்கும், பொது மருத்துவமனைகளில் 500 பேருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடித்து அவர்களை கட்டாயம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்.

அண்டை மாநிலங்களில் வைரஸ் தொற்று அதிகமாக இருப்பது தான் கர்நாடகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதற்கு காரணம் ஆகும். பிரதமர் மோடி நாளை (அதாவது இன்று) கொரோனா பரவல் குறித்து அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் அவர் கூறும் வழிகாட்டுதல்படி விதிமுறைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்.
Tags:    

Similar News