செய்திகள்
ரமேஷ் ஜார்கிகோளி

ராஜினாமா செய்யும் முன்பு 2 நிபந்தனைகளை விதித்த ரமேஷ் ஜார்கிகோளி

Published On 2021-03-04 02:43 GMT   |   Update On 2021-03-04 02:43 GMT
பாலியல் புகாரை அடுத்து ரமேஷ் ஜார்கிகோளி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்யும் முன்பு, முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு 2 நிபந்தனைகளை விதித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
பெங்களூரு :

பாலியல் புகாரை அடுத்து நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்யும் முன்பு, முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு 2 நிபந்தனைகளை விதித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

அதாவது, நான் ராஜினாமா செய்த பிறகு நீர்ப்பாசனத்துறையை வேறு எந்த மந்திரிக்கும் ஒதுக்கக்கூடாது, அதை நீங்களே (எடியூரப்பா) வைத்துக்கொள்ள வேண்டும், அடுத்த முறை மந்திரிசபை விரிவாக்கம் செய்யும்போது எனது குடும்பத்தை சேர்ந்த சகோதரர் பாலச்சந்திர ஜார்கிகோளிக்கு மந்திரி பதவி வழங்கி நீர்ப்பாசனத்துறையை ஒதுக்க வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிபந்தனைகள் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
Tags:    

Similar News