செய்திகள்
மந்திரி சுதாகர்

மார்ச் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும்: மந்திரி சுதாகர்

Published On 2021-02-18 03:44 GMT   |   Update On 2021-02-18 03:44 GMT
கர்நாடகத்தில் வருகிற மார்ச் மாதம் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
பெங்களூரு :

கர்நாடக மாம்பழ விவசாயிகள் மற்றும் அதன் விற்பனையாளர்கள் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

மாம்பழத்திற்கு உடனடி சந்தை தேவைப்படுகிறது. அதை நீண்ட காலம் பாதுகாத்து வைக்க முடியாது. சிக்பள்ளாப்பூர், கோலாரில் சரியான அளவில் குளிர்பதன கிடங்கு வசதிகள் இல்லை. கரும்பு விவசாயிகள் வட கர்நாடகத்தில் தங்களின் கரும்புகளை பாதுகாக்க ஒரு கூட்டுறவு சங்கத்தை தொடங்கியுள்ளனர். அதே போல் இங்கும் ஒரு கூட்டுறவு சங்கத்தை தொடங்கி, மாம்பழங்களை பதப்படுத்தி வைத்து பாதுகாக்க குளிர்பதன கிடங்குகளை விவசாயிகள் அமைக்க வேண்டும்.

கர்நாடகத்தில் 1.67 எக்டேரில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. கோலார், சிக்பள்ளாப்பூர், ராமநகரில் தான் அதிகளவில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பு ஆண்டில் 14 லட்சம் டன் மாம்பழம் சாகுபடி ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயிர்களில் அதிகளவில் ரசாயனங்கள் கலந்து மருந்துகள் பயன்படுத்துவதால், நோய்கள் அதிகரித்து வருகின்றன. அதனால் விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

கேரளா எல்லை பகுதிகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. அதனால் கேரளாவில் இருந்து கர்நாடகம் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. கேரள எல்லையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து போலீஸ் துறையுடன் ஆலோசனை நடத்தப்படும். கர்நாடகத்தில் மார்ச் மாதத்தில் இருந்து பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.
Tags:    

Similar News