செய்திகள்
நீர்வழித்தட தொடக்க விழா

கேரளாவில் 310 கி.மீ. நீள நீர்வழித்தடம் - பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்

Published On 2021-02-16 01:31 GMT   |   Update On 2021-02-16 01:31 GMT
கேரளாவில் 310 கி.மீ. நீள நீர்வழித்தடத்தை முதல் மந்திரி பினராயி விஜயன் நேற்று தொடங்கி வைத்தார்.
திருவனந்தபுரம்:

கேரள போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறையின் புதிய அத்தியாயமாக, 520 கி.மீ. நீள நீர்வழித்தடம் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 310 கி.மீ. தூர நீர்வழித்தட பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்த நீர்வழித்தடத்தை முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நீர்வழித்தடம் கேரளாவின் தெற்கு பகுதியான கோவளத்தை, வடக்குப் பகுதியான பெக்கால் உடன் இணைக்கிறது. இதில் வேலி என்ற இடத்திலிருந்து கடினம்குளம் என்ற இடம் வரை 11 கிலோ மீட்டர் தூரத்தில் 24 இருக்கைகள் கொண்ட சூரியசக்தி படகு சவாரி செய்யலாம். இந்த படகில் முதல் மந்திரி பினராயி விஜயன் பயணம் செய்தார்.

விழாவில் பினராயி விஜயன் பேசுகையில், இந்த நீர்வழித்தடத்தின் மூலம் சுற்றுலாத் துறையிலும், போக்குவரத்து துறையிலும் புதிய சாத்தியங்களுக்கு நாம் வழிவகுத்திருக்கிறோம். முதல் கட்ட பணிகளில் கால்வாய்கள் ஆழப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்தகட்ட பணிகளின்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கால்வாய்கள் அகலமாக்கப்படும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News