செய்திகள்
ராகுல் காந்தி

இதற்கு பிரதமர் மோடி பதில் சொல்லியே ஆகவேண்டும் -ராகுல் காந்தி வலியுறுத்தல்

Published On 2021-02-12 04:18 GMT   |   Update On 2021-02-12 04:18 GMT
பிரதமர் மோடி ஒரு கோழை, அவரால் சீனாவுக்கு எதிராக நிற்க முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கூறியதாவது:-

கிழக்கு லடாக் எல்லையில் உள்ள நிலவரம் தொடர்பாக நேற்று பாதுகாப்புத்துறை மந்திரி அறிக்கை வெளியிட்டார். இப்போது, நமது படைகள் பிங்கர்-3 மலைப்பகுதிக்கு செல்வதாக அவர் கூறினார். பிங்கர்-4 பகுதி நமது பிராந்தியம். இப்போது, அந்த பிங்கர்-4 பகுதியில் இருந்து பிங்கர்-3 பகுதிக்கு நமது படைகள் சென்றுள்ளன. நமது பிராந்தியத்தை பிரதமர் மோடி ஏன் சீனாவுக்கு விட்டுக்கொடுத்தார்?

சீனா நுழைந்த இடத்திலிருந்து மிக முக்கியமான பகுதியான டெப்சாங் சமவெளி குறித்து பாதுகாப்பு அமைச்சர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உண்மை என்னவென்றால், பிரதமர் இந்தியப் பகுதியை சீனாவுக்குக் கொடுத்திருக்கிறார். இதுபற்றி நாட்டு மக்களுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும்.

பிரதமர் ஒரு கோழை, அவரால் சீனாவுக்கு எதிராக நிற்க முடியாது. அவர் நமது ராணுவத்தின் தியாகத்தை அவமதிக்கிறார். ராணுவத்தின் தியாகத்திற்கு துரோகம் செய்கிறார். இவ்வாறு செய்வதை இந்தியாவில் உள்ள யாரும் அனுமதிக்கக்கூடாது. 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News