செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதியில் ரத சப்தமி- கூடுதலாக 25 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு

Published On 2021-02-11 07:00 GMT   |   Update On 2021-02-11 07:00 GMT
திருப்பதியில் ரத சப்தமி விழாவையொட்டி ஆன்லைனில் இன்று கூடுதலாக 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. கூடுதலாக தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆன்லைனில் ரூ. 300 தரிசன டிக்கெட்டில் 20 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனத்தில் 20 ஆயிரம் பக்தர்களும், வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை மறுதினம் மினி பிரம்மோற்சவம் எனும் ரதசப்தமி விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. ரதசப்தமி அன்று சின்ன சே‌ஷ வாகனம், பெரிய சே‌ஷ வாகனம், கருட சேவை, சர்வ பூபால வாகனம், முத்துப்பந்தல் வாகனம், மோகினி அவதாரம், சந்திர பிரபை வாகனம் மற்றும் தங்கத்தேர் ஆகிய 9 வாகனங்கள் ஒரே நாளில் மாடவீதிகளில் உலா வருகின்றன.

ரத சப்தமியன்று கூடுதலாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் வாகன வீதி உலாவை கண்டுகளிக்கவும் ரூ.300 டிக்கெட்டில் ஆன்லைனில் மேலும் 25 ஆயிரம் டிக்கெட்டில் வெளியிட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.

இதையடுத்து இன்று காலை 9 மணி அளவில் ஆன்லைனில் 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. கூடுதலாக தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News