செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டவர்களில் 97 சதவீதத்தினர் திருப்தி - மத்திய சுகாதார அமைச்சகம்

Published On 2021-02-09 23:52 GMT   |   Update On 2021-02-09 23:52 GMT
கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டவர்களில் 97 சதவீதத்தினர் திருப்தி அடைந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் கடந்த ஜனவரி 16-ம் தேதியில் இருந்து இந்தியா முழுவதும் போடப்பட்டு வருகின்றன. இவற்றில் சுகாதார பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து வயது முதிர்ந்தோருக்கு தடுப்பூசிகள் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளன.

இந்நிலையில், மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது, ஒட்டுமொத்த தடுப்பூசி அனுபவத்தின்படி, தடுப்பூசி போடப்பட்ட அடுத்த நாள் அனைத்து பயனாளர்களுக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்.  இந்த எஸ்.எம்.எஸ்.சில் அந்நபரின் பெயர், தடுப்பு மருந்துகள், 5 கேள்விகள் ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கும். இதன்படி, 97 சதவீதம் பேர் திருப்தி அடைந்துள்ளனர் என தெரிய வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதுவரை 63,10,194 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்த பூஷண், வரும் 13-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் வழங்கப்படும் என கூறியுள்ளார்.
Tags:    

Similar News