செய்திகள்
ராகுல் காந்தி

நாட்டு நலனுக்காகவே விவசாயிகள் சத்தியாக்கிரக போராட்டம் நடத்துகின்றனர் - ராகுல் காந்தி

Published On 2021-02-06 19:17 GMT   |   Update On 2021-02-06 19:17 GMT
நாட்டு நலனுக்காகத்தான் விவசாயிகள் சத்தியாக்கிரக போராட்டம் நடத்தி வருகின்றனர் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கையேந்த வைத்து விடும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை ஒழித்துக்கட்டி விடும் என்று கூறி அவற்றை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டெல்லியில் 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், நாட்டு நலனுக்காகத்தான் விவசாயிகள் சத்தியாக்கிரக போராட்டம்நடத்தி வருகின்றனர் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நாட்டு நலனுக்காகத்தான் அன்னதான பிரபுக்கள் (விவசாயிகள்) அமைதியான வழியில் சத்தியாக்கிரக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் மக்களுக்கும், நாட்டுக்கும் தீங்கு விளைவிக்கும். இந்த போராட்டத்துக்கு முழுமையான ஆதரவு தருவோம் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News