செய்திகள்
வெங்கையா நாயுடு

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி- மாநிலங்களவை ஒத்திவைப்பு

Published On 2021-02-02 05:13 GMT   |   Update On 2021-02-02 05:13 GMT
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திக்கப்பட்டது.
புதுடெல்லி:

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் 3வது நாளான இன்று மாநிலங்களவை தொடங்கியது.

மாநிலங்களவை நடவடிக்கையை முடக்காமல் தொடரை சுமுகமாக நடத்த எம்.பி.க்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வெங்கையா நாயுடு  கூறினார்.

விவசாயிகள் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் காரணமாக மாநிலங்களவை காலை 10.30 மணி வரை ஒத்திக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாநிலங்களவைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறியதாவது:

வேளாண் மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டதாக கூறுவது தவறு என்றும் வேளாண் சட்டங்கள் மீது மாநிலங்களவையில் 4 மணி நேரம் விவாதம் நடைபெற்றது.

வேளாண் சட்டங்கள் பகுதி பகுதியாக ஆய்வு செய்யப்பட்ட பிறகே நிறைவேற்றப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநிலங்களவை 10.30 மணிக்கு கூடியதும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை மீண்டும் 11.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

Similar News