செய்திகள்
பாராளுமன்றம்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்று தொடக்கம்

Published On 2021-01-28 19:55 GMT   |   Update On 2021-01-29 00:55 GMT
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.
புதுடெல்லி:

நடப்பு ஆண்டின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரின் தொடக்க நிகழ்வாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்று முதல் பிப்ரவரி 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரம் மற்றும் பூஜ்ஜியம் நேர விவாதத்திற்கு (ஜீரோ ஹவர்) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கூட்டத் தொடரில் பங்கேற்கும் எம்.பி.க்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

மேலும், பாராளுமன்ற கேன்டினில் நடைமுறையில் இருந்துவந்த உணவு மானியம் முற்றிலும் நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற கூட்டத்தொடரில் விவசாயிகள் போராட்டம், கொரோனா தடுப்பூசி மீதான சந்தேகம், பொருளாதார வீழ்ச்சி உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளன.   
Tags:    

Similar News